WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 30, 2015

பொங்கல் பரிசு ரூ.150?

                                      

ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசாக, 150 ரூபாய் ரொக்கம் வழங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பொங்கலை முன்னிட்டு, கடந்த தி.மு.க., ஆட்சியில், தலா, அரை கிலோ பச்சரிசி, வெல்லம்; பச்சை பருப்பு, 100 கிராம்; முந்திரி, ஏலம், திராட்சை தலா, 20 கிராம் அடங்கிய பொங்கல் பரிசு பை, ரேஷன் கடைகளில், இலவசமாக வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின், ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்றதும், பொங்கலுக்கு ஒரு கிலோ பச்சரிசி, வெல்லத்துடன், 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்ததால், 2015ம் ஆண்டு பொங்கல் பரிசு பை வழங்கவில்லை. இந்நிலையில், சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், பொங்கல் பை வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னை, தலைமை செயலகத்தில், உணவு, கூட்டுறவு, நிதிதுறை அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொங்கலை முன்னிட்டு, ஒரு கிலோ அரிசி, சர்க்கரையுடன், 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட இருந்தது. ஆனால், அரிசி இருப்பு குறைவாக உள்ளது. இதனால், 30 ஆயிரம் டன் அரிசி ஒதுக்கீடு செய்ய கோரி, முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். வெளிச்சந்தையில், ஒரு கிலோ சர்க்கரை, அரிசியின் மதிப்பு, 60 ரூபாய். எனவே, அரிசி, சர்க்கரைக்கு பதில், 1.88 கோடி ரேஷன் கார்டுதாரருக்கு, தலா, 150 ரூபாய்,ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு, 300 கோடி ரூபாய் செலவாகும். பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பை, முதல்வர் ஜெயலலிதா விரைவில்

இலவச வேட்டி - சேலை தாறாங்க!

பொங்கல் பண்டிகையை ஒட்டி, இலவச வேட்டி - சேலை வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று துவக்கி வைத்தார். வரும், 2016 பொங்கல் பண்டிகைக்கு, 1.68 கோடி சேலைகள், 1.67 வெளியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.கோடி வேட்டிகள் வழங்கப்பட உள்ளன; இத்திட்டத்திற்காக, 486.36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று, ஐந்து குடும்பங்களுக்கு, வேட்டி - சேலை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார்.அமைச்சர்கள் கோகுல இந்திரா, உதயகுமார், தலைமைச் செயலர் ஞானதேசிகன் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.