ஏர்டெல் தனது பிரிபெய்டு இணையதள சேவைக்கு வேலிடிட்டி எனப்படும் காலக்கெடுவை அகற்றியுள்ளது. டேட்டா இருக்கும் நாள்வரை காலக்கெடு பற்றி
கவலைப்படாமல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும். நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட பாரதி ஏர்டெல் நிறுவனம் இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் தங்களது இணையதள சேவைக்காக செய்துகொள்ளும் ரீசார்ஜ்ஜுகளுக்கு வேலிடிட்டி எல்லை கிடையாது. உதாரணத்திற்கு, 1 எம்பி டேட்டா பயன்படுத்த வாடிக்கையாளர் ஒருவர் ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்குள் இணையதள டேட்டாவை காலி செய்தாக வேண்டிய கட்டாயம் முன்பு இருந்தது. ஆனால், இனிமேல் டேட்டாவை காலி செய்ய காலக்கெடு கிடையாது. உபயோகம் செய்து டேட்டா காலியான பிறகு ரீசார்ஜ் செய்தால் போதும். அந்த நிறுவன மார்க்கெட் இயக்குநர் அஜய் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.