'பல்கலை விதிகளை மீறாமல், தகுதியான பேராசிரியர்களை நியமித்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்' என, பல்கலை மானிய குழு -
யு.ஜி.சி., துணை தலைவர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணா பல்கலையில், அவர் அளித்த பேட்டி:பல்கலைகளில், யு.ஜி.சி., விதிகளின் படி, தகுதியான பேராசிரியர்களை நியமிக்க, பலமுறை அறிவுறுத்தி உள்ளோம். ஆனால், யு.ஜி.சி.,க்கு தெரியாமல், பல்கலைகளில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு, விதிமீறல் நடந்துள்ளது. அந்த பல்கலைகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பின்பற்றி, பல்கலைகள், பேராசிரியர் நியமனம் குறித்து, யு.ஜி.சி.,க்கு அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.