அரசு கல்லுாரிகளில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை, மீண்டும் நடத்த உயர் கல்வித்துறை
உத்தர விட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மாணவர்கள், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் பின் தங்கியிருப்பதை, பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., கண்டறிந்தது.இதையடுத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி, அந்த மாணவர்களை முன்னேற்ற, பேராசிரியர்களுக்கு கூடுதலாக, 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் அளிக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி, 2012 வரை சிறப்பு வகுப்புகள் நடந்தன. இதற்கான நிதியில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. அதனால், மூன்று ஆண்டுகளாக இந்த நிதி நிறுத்தப்பட்டு, சிறப்பு வகுப்புகள் நடக்கவில்லை.மீண்டும் வகுப்புகள் நடத்த நிதி தருவதாக, உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, ஒவ்வொரு பேராசிரியரும், வாரம்தோறும் கூடுதலாக, ஒரு மணி நேரம் பாடம் நடத்த வேண்டும். இந்த வகுப்பை, சனி, ஞாயிறு நடத்த வேண்டும் என,
மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.