Showing posts with label college news. Show all posts
Showing posts with label college news. Show all posts
Friday, May 15, 2020
கொரோனா நீங்கிய பிறகே கல்லூரிகள் திறப்பு.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது: கொரோனா பாதிப்பு என்றைக்கு தமிழகத்தை விட்டு விலகுகிறதோ அன்றைக்கு கல்லூரிகள் திறக்கப்படும். அப்போது தேர்வுகளை நடத்த தயாராக உள்ளோம். கல்லூரிகள் தற்போது தனிமைபடுத்தப்பட்ட மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிப்பு குறைந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே மாணவர்களை அனுமதிக்க முடியும். கல்லூரிகள் திறப்பு விவகாரத்தில் அரசு சரியான தீர்வோடு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Wednesday, July 12, 2017
தொலைநிலையில் பி.இ., படிக்க தடை.
தொலைநிலை கல்வியில், பி.இ., - பி.டெக்., மற்றும் டிப்ளமா பட்டங்கள் பெற்றால் செல்லாது' என, அகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
இது குறித்து, ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இன்ஜினியரிங், தொழிற்நுட்பம், கட்டடக் கலை, நகர கட்டமைப்பு, பார்மசி, ஓட்டல் மேலாண்மை மற்றும் உணவு தொழிற்நுட்பம், 'அப்ளைட் ஆர்ட்ஸ்' ஆகியவற்றில், இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ளமா படிப்புகளை, தொலைநிலை கல்வியில் படிக்க, அங்கீகாரம் வழங்கப்படவில்லை.எனவே, இந்த படிப்புகளை தொலைநிலையில் படித்து பட்டம் பெற்றால், அது செல்லாது. இதை கல்வி நிறுவனங்களும், பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Thursday, September 29, 2016
உயர் கல்வி துறைக்கு கெடு: போராட்டம் தள்ளிவைப்பு.
போராட்டம் அறிவித்த, கல்லுாரி ஆசிரியர் கூட்டமைப்பிடம், உயர் கல்வித்துறை சமாதான கடிதம் அளித்துள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற, ஆசிரியர்கள், ஒரு மாதம் கெடு
விதித்துள்ளனர். தமிழகத்தில், 87 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள், 162 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன; இரண்டு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், முதல்வர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும், கல்லுாரிகளில், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை.
இது குறித்து ஆசிரியர் சங்கத்தின் சார்பில், அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அனுப்பியும், நடவடிக்கை இல்லை. இதனால், இரண்டு நாட்கள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக, கல்லுாரி ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜேக்' அறிவித்தது. அரசு தரப்பில், கல்லுாரி கல்வி இயக்குனர், ராஜேந்திர ரத்னு, 'ஜேக்' அமைப்பினரிடம், சமாதான பேச்சு நடத்தினார்.
முடிவில், 'தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. தேர்தல் முடிந்ததும், கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; போராட்டத்தை கைவிடுங்கள்' என, எழுத்துப்பூர்வமான கடிதம் கொடுக்கப்பட்டது.
இது குறித்து, 'ஜேக்' செயலர், பசுபதி கூறுகையில், ''மேலும் அவகாசம் கேட்கக்கூடாது; அக்டோபர் இறுதிக்குள், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், போராட்டம், தீவிரமாகும்,'' என்றார்.
Sunday, September 18, 2016
80 அரசு கல்லூரிகளில்51 முதல்வர் பணியிடம் காலி
51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் 80 அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 51
Saturday, September 3, 2016
நாடு முழுவதும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகள் மீதான தடையை நீக்கியது யுஜிசி.
நாடு முழுவதிலும் உள்ள திறந்த நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி ஆய்வுப் படிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நீக்கியுள்ளது.
வரும் கல்வியாண்டு
Tuesday, August 16, 2016
எம்.இ., - எம்.டெக்., 15 ஆயிரம் இடங்கள் காலி.
அண்ணா பல்கலையின், எம்.இ., - எம்.டெக்., கவுன்சிலிங் முடிந்து விட்ட நிலையில், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை
Saturday, August 13, 2016
கல்லூரி மற்றும் பல்கலைகளில் விருப்ப பாடம் கட்டாயம்.
கல்லுாரி மற்றும் பல்கலைகளில் பாடத்திட்ட படிப்புகள் மட்டுமின்றி மற்ற
Sunday, July 17, 2016
துணைவேந்தர் நியமனத்தில் அரசு அலட்சியம்: தகுதியானவர்களை தேடும் உயர்கல்வித் துறை.
பல்கலை துணைவேந்தர் நியமனத்தில், அரசு கவனம் செலுத்தாததால், உயர்கல்வி பணிகள் முடங்கி உள்ளன. இதனால், தமிழகத்தில் தகுதியான கல்வியாளர்கள் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளாகவே உயர்கல்வி நிர்வாகம், அதல பாதாளத்துக்கு செல்வது போல
Monday, July 11, 2016
தமிழகம் முழுவதும் 50 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலி.
தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் 89 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாத நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள 89 கலைக்கல்லூரிகளில், 50 கல்லூரிகளில் முதல்வர்கள்
Saturday, June 25, 2016
அழகப்பா பல்கலை., கவுன்சிலிங் அறிவிப்பு.
பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி குறித்த விபரங்களை காரைக்குடி அழகப்பா பல்கலை., அறிவித்துள்ளது.
இதன்படி,
Wednesday, June 15, 2016
பெரியார் பல்கலை: இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகளை காண இங்கே கிளிக் செய்யவும்.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்
உயர் கல்வியில் அதிகார போட்டி: செயலகம் சென்ற பைல்கள் மாயம்?
தமிழக உயர் கல்வித்துறை மற்றும் பல்கலை, கல்லுாரிகளுக்கு இடையே அதிகாரப் போட்டி உச்சத்தில் இருப்பதால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல்கலைகள், கல்லுாரிகள் எல்லாம்,
Monday, June 13, 2016
அரசுக் கல்லூரிகளில் சிபாரிசு கடிதங்கள் குவிகிறது!
கடலுார் மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சீட் கேட்டு சிபாரிசு கடிதங்கள் குவிந்து வருவதால், கல்லுாரி நிர்வாகங்கள் நெருக்கடிக்கு ஆளாகின்றன.
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு கடந்த மாதம் 17ம் தேதி, வெளியானது. இதில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள், உயர்கல்வி படிக்க, விரும்பிய கல்லுாரிகளுக்கு விண்ணப்பித்தனர்.
மாவட்டத்தில் கடலுார், சி.முட்லுார், விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களில், மொத்தம் மூன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன.
இக்கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்போது நடந்து வருகிறது. இதற்கிடையே, கல்லுாரிகளில் விரும்பிய பாடப்பிரிவில் சேர சீட் வாங்கி தருவதாகக் கூறி, இடைத்தரகர்கள் மாணவ, மாணவியரை நேரடியாகவும், மறைமுகமாகவும் அணுகி பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, வேண்டியவர்களுக்கு சீட் கேட்டு சிபாரிசு கடிதங்கள் நாளுக்கு நாள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் சம்பந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகங்களுக்கு சிபாரிசு கடிதங்களை அளிக்கின்றனர். வருவாய், காவல், தீயணைப்பு உள்ளிட்ட அரசு துறையினரும் சிபாரிசு கடிதங்களை அளிக்கின்றனர். இதனால், கல்லுாரி நிர்வாகங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றன.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், கல்லுாரிகளில் நடைபெறும் கலந்தாய்வை பயன்படுத்தி இடைத்தரகர்கள் சீட் வாங்கித் தருவதாக பணம் பறிக்கின்றனர். மேலும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட் கேட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் சிபாரிசு கடிதங்களை அளிப்பதால் நெருக்கடிக்கு ஆளாகிறோம். முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் சிபாரிசு கடிதங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கலந்தாய்வின்போது, கல்லுாரியில் எந்தெந்த துறைகளில் எவ்வளவு காலியிடம் உள்ளது; இனவாரியாக எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகிறது என, அறிவிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இதனால், சீட் வாங்கித் தருவதாக கூறி பணம் பறிக்க அணுகும் இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.
Wednesday, April 27, 2016
எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு.
எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான, தமிழக பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்' தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, மே,
Monday, March 14, 2016
சென்னை பல்கலை தேர்வு: மறு கூட்டல் 'ரிசல்ட்' அறிவிப்பு.
சென்னை பல்கலை தேர்வு மறு கூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன.சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி
Wednesday, March 9, 2016
பட்டம் பெற பல ஆண்டுகள் படித்தோரும் பேராசிரியர்கள்..!அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அவலம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களின் தகுதி குறித்து பல்வேறு
Sunday, February 14, 2016
கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி., படிப்பு ரத்து செய்ய கல்லூரிகள் முடிவு.
தமிழகம் முழுவதும், 60 இன்ஜினியரிங் கல்லுாரிகள், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளை ரத்து
Tuesday, February 9, 2016
"செட்', "நெட்' தகுதியில்லாவிட்டாலும் பேராசிரியர் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பப்பட்டவர்களுக்கு எம்.ஃபில், பிஎச்.டி., "செட்' அல்லது "நெட்' தகுதிகள் இல்லாவிட்டாலும் பேராசிரியர் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அரசுக் கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் உத்தரவு
Sunday, February 7, 2016
கல்லூரி வளாகத்தில் வெடித்த மர்ம பொருள் : நாட்றம்பள்ளியில் ஒருவர் பலி.
நாட்றம்பள்ளி அருகே, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலுார் மாவட்டம் நாட்றம்பள்ளி சுங்கச்சாவடி அருகே, தனியார்
Friday, January 22, 2016
கல்லூரி ஆசிரியர்மறியல் போராட்டம்.
கல்லுாரி ஆசிரியர் நியமன முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி, தமிழகம் முழுவதும் பேராசிரியர்கள், இரண்டு நாட்கள் மறியல் போராட்டம் நடத்தியதால், கல்லுாரிகளில் வகுப்புகள் நடக்கவில்லை.
முதற்கட்டமாக,
Subscribe to:
Posts (Atom)