WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 11, 2016

தமிழகம் முழுவதும் 50 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலி.


தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கீழ் 89 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாத நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள 89 கலைக்கல்லூரிகளில், 50 கல்லூரிகளில் முதல்வர்கள்
இல்லை. இவற்றில் 33 கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள், கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றவர்கள். மீதமுள்ள பெரும்பாலான கல்லூரிகளில், ஒரு வருடத்திற்கும் மேலாக பொறுப்பு முதல்வர்களே, உள்ளனர். தர்மபுரி மண்டலத்தில் உள்ள 13 கல்லூரிகளில் மட்டும், 9 முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் அரசு, அக்கல்லூரிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தவறிவிடுகிறது. கல்லூரி தொடங்கியவுடன் பொறுப்பு முதல்வர்கள் நியமனம் செய்யப்படுகிறார்களே தவிர, அதன்பின்னர் நிரந்த முதல்வர்களை பணியமர்த்த எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் கல்லூரி நிர்வாகம் சீர்குலைந்து விடுகிறது. கல்லூரி சம்பந்தப்பட்ட எந்த விவகாரமாக இருந்தாலும், அவற்றில் முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் கல்லூரி முதல்வருக்கு மட்டுமே உண்டு. அரசு கல்லூரிகளை பொறுத்தவரை, இயல்பாகவே பல்வேறு பிரச்னைகள் காணப்படுகிறது. மாணவர்களிடையே எழும் கோஷ்டி மோதல், பேராசிரியர்களுக்குள் நிலவும் ஈகோ பிரச்னை, முன்னாள் மாணவர்கள் மற்றும் வெளியாட்களால் நடக்கும் அசம்பாவித சம்பவங்கள் என அனைத்திற்கும் கல்லூரி முதல்வரே பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பு முதல்வர்களாக இருப்பவர்களுக்கு முழு அதிகாரம் கிடைக்காததால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர். உரிய தகுதிகளை உடைய 700க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், முதல்வராக பதவி உயர்வு பெற காத்திருக்கின்றனர். எனவே, தகுதியானவர்களை காலியிடங்களில் நியமிக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.