அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கு ஆக.1 முதல் 8 வரை
விண்ணப்பிக்கலாம். கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் பகுதிகளில் இருக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2016-17ம் கல்வியாண்டில் தொடர்ந்து 9ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள்.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துறையினரிடமிருந்து வருமான சான்று பெற்று அளிக்க வேண்டும்.தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.8ம் தேதி ஆகும். இதற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 பேருக்கு 12ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.1000 வீதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.