WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 11, 2016

2-ஆம் ஆண்டு பியூசி துணைத் தேர்வு: ஜூலை 14-க்கு ஒத்திவைப்பு.

ஜூலை 7-ஆம் தேதி நடக்கவிருந்த 2-ஆம் ஆண்டு பியூசி துணைத் தேர்வு, ஜூலை 14-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து பியூ கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிய 2-ஆம் ஆண்டு பியூசி துணைத் தேர்வு, ஜூலை 13-ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 1-இல் சமூகவியல், கணக்கியல், இயற்பியல்,
ஜூலை 2-இல் பொருளாதாரம், கணிதம், தருக்கவியல், மனை அறிவியல், ஜூலை 4-இல் ஆங்கிலம், ஜூலை 5-இல் வணிகப்படிப்பு, வேதியியல், கல்வி ஆகிய தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின்படி ஜூலை 7-ஆம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, மராத்தி, அரபிக் ஆகியபாட மொழிகளின் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் புனித ரமலான் திருநாளையொட்டி ஜூலை 6-ஆம் தேதிக்குப் பதிலாக ஜூலை 7-ஆம் தேதி விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜூலை 7-ஆம் தேதி நடக்கவிருந்த கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, மராத்தி, அரபிக் ஆகிய மொழிப் பாடங்களின் தேர்வு, ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கெனவே அறிவித்தவாறு, ஜூலை 8-இல் அரசியல் அறிவியல், புள்ளியியல், உயிரியல், ஜூலை 9-இல் வரலாறு, மின்னணுவியல், கணினி அறிவியல், ஜூலை 11-இல் புவியியல், நில அமைப்பியல், அடிப்படை கணிதம், கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை, மனநலவியல், ஜூலை 12-இல் ஹிந்தி, சம்ஸ்கிருதம், உருது, ஜூலை 13-இல் சிறப்பு கன்னடம் பாடங்களுக்குத் தேர்வு நடைபெறவுள்ளன. இதில் எந்தவித மாற்றமும் இல்லை. தேர்வுகள் காலையில் 9 முதல் 12.15 மணி வரையிலும், மதியம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரையில் நடத்தப்படுகிறது. அனைத்து பாடங்களுக்கும் தலா 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.