WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 16, 2016

எம்.இ., - எம்.டெக்., 15 ஆயிரம் இடங்கள் காலி.


அண்ணா பல்கலையின், எம்.இ., - எம்.டெக்., கவுன்சிலிங் முடிந்து விட்ட நிலையில், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை
இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கு, தமிழ்நாடு பொது நுழைவு தேர்வான, 'டான்செட்' நடத்தப்படு கிறது. இந்த ஆண்டு, இத்தேர்வுக்கு, 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்; இவர்களில், 17 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுக்கு பின், அண்ணா பல்கலையில், தமிழ்நாடு பொது மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடந்தது. இதற்கு விண்ணப்பித்த, 7,000 பேரில், 6,676 பேர் மட்டும் தகுதி பெற்று, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இதில், 4,764 பேர் மட்டுமே இடங்களை தேர்வு செய்தனர். 1,687 பேர் கவுன்சிலிங்குக்கு வரவில்லை. மற்றவர்கள் இடம் கிடைத்தும் ஒதுக்கீடு பெறாததால், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.