WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 13, 2026

பிளஸ்-2 விடைத்தாள் மறுமதிப்பீடு: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 17 வரை நீட்டிப்பு.

 

பிளஸ்-2 விடைத்​தாள் நகல் பெற்ற மாணவர்​கள் மறுகூட்​டல் மற்​றும் மறும​திப்​பீட்​டுக்கு விண்​ணப்​பிப்​ப​தற்​கான கால அவகாசம் ஜூன் 17-ம் தேதிவரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தாக அரசு தேர்​வுத் துறை அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக அரசு தேர்​வு​கள் இயக்​குநர் சசிகலா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: பிளஸ்-2 பொதுத்​தேர்​வுக் ​கான விடைத்​தாள் நகல் கோரி விண்​ணப்​பித்த மாணவர்​கள் ஜூன் 5 முதல் 15-ம் தேதி வரை பாட​வாரி​யாக பல்​வேறு கட்​டங்​களாக அவற்றை பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. அந்த வகை​யில் ஆங்​கிலம், உயி​ரியல், கணிதம் பாடங்​களுக்​கான விடைத்​தாள் நகல்​களை ஜூன் 12-ம் தேதி பிற்​பகல் முதல் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம்.

விடைத்​தாள் நகல்​களை பதி​விறக்​கம் செய்த பின்​னர் மாணவர்​கள் மறுகூட்​டல், மறும​திப்​பீட்​டுக்கு ஜூன் 16-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. தற்போது மாணவர்​களின் நலன் கருதி இக்​கால அவகாசம் ஜூன் 17-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​படு​கிறது.

விடைத்​தாள் நகல்: விடைத்​தாள் நகல் பதி​விறக்​கம், மறுகூட்​டல், மறும​திப்​பீட்​டுக்கு விண்​ணப்​பிப்​பது தொடர்​பான சந்​தேகங்​களுக்கு 9498383075, 9498383076 ஆகிய எண்​களில் தொடர்​பு​கொள்​ளலாம். இவ்வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.