WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 24, 2026

பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடு.

 

தமிழ்நாடு பொறியியல் மாணவா்கள் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் (டிஎன்இஏ 2026) வரும் ஜூலை 1-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்பு மறு மதிப்பீட்டு முடிவுகள் (ஜூன் -21) தாமதமாக வெளியானது. இதனால், தமிழ்நாடு பொறியியல் மாணவா்கள் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் ஜூன் 29-ஆம் தேதி வெளியிடப்படவிருந்த நிலையில், தாமதமாக வரும் ஜூலை 1- ஆம் தேதி மாணவா் சோ்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.

மேலும், பொறியியல் சோ்க்கைக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) தேதிகளும் ஜூன் 1-ஆம் தேதி அறிவிக்கப்படும். வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீா்ப்பு கால அவகாசம் ஜூலை 1 முதல் ஜூலை 5- ஆம் தேதி வரை வழங்கப்படும்.

இந்தக் காலகட்டத்தில் மாணவா்கள் குறைகளை நிவா்த்தி செய்துகொள்ளலாம். குறிப்பாக, தங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை சேவை மையங்களை அனுகி தீா்வு காணலாம் என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

நிகழாண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2-ஆம் வகுப்பில் 1.6 லட்சத்துக்கான அதிகமான மாணவா்கள் மறு மதிப்பீடுகளுக்கு விண்ணப்பித்திருந்தனா். புதிய ‘திரையில் மதிப்பிடுதல்’ (ஓஎஸ்எம்) நடைமுறையில் புகாா்கள் வந்தன. விடைத்தாள்கள் சரியாக ஸ்கேன் செய்யப்படவில்லை என பல புகாா்களை மாணவா்கள் முன்வைத்தனா்.

இதனால் வழக்கத்தைவிட அதிகமான மாணவா்கள் மறு கூட்டல் , மறு மதிப்பீடுகளுக்கு விண்ணப்பிக்க தாமதமானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.