நாடு முழுவதும் உயர்நிலை பள்ளிகளில் தரமான மற்றும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மத்திய
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஹைதராபாத்தில் உள்ள மூஷீராபாத் உயர்நிலை பள்ளியில் மாணவ, மாணவிய ருடன் கலந்துரையாடினார். மாண வர்கள் மத்திய அமைச்சரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். இதற்கு மத்திய அமைச்சர் பதிலளிக்கும்போது, ‘நாடு முழுவ திலும் ஒரே மாதிரியான பாட திட்டம் உயர்நிலைப் பள்ளிகளில் அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தரத்தில் மட்டுமல்லாது, அறிவுப்பூர்வமாகவும், ஆய்வுப் பூர்வமாகவும் இந்த கல்வித் திட்டம் சிறப்பானதாக அமையும். இதற்காக பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நானும் கூட ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன் தான். செய்தித்தாள் வாங்கக் கூட முடியாத நிலையில் பக்கத்து வீட்டுக்குச் சென்று தினமும் செய்தித்தாள் படித்து வந்தேன்’ எனக் கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலங்கானா மாநில துணை முதல்வர் கடயம் ஸ்ரீஹரி, தெலங் கானா மாநிலத்தில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதை 10-ம் வகுப்பு வரை நீட்டிக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.