WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 7, 2016

கல்லூரி வளாகத்தில் வெடித்த மர்ம பொருள் : நாட்றம்பள்ளியில் ஒருவர் பலி.

நாட்றம்பள்ளி அருகே, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள் வெடித்து சிதறியதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலுார் மாவட்டம் நாட்றம்பள்ளி சுங்கச்சாவடி அருகே, தனியார்
இன்ஜினியரிங் கல்லுாரி அமைந்துள்ளது. இங்கு, நேற்று மதியம், 12:10 மணியளவில், வானத்தில் இருந்து திடீரென மர்ம பொருள் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில், கல்லுாரி வளாகத்தில் நின்றிருந்த பஸ் டிரைவர் காமராஜ், 40, உடல் கருகியதால் அலறித் துடித்தார். உடனடியாக அவர், வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு துாக்கி செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒரு மாணவர் மற்றும் 26 - 57 வயதுடைய பணியாளர்கள் மூவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு, திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வானிலிருந்து கீழே விழுந்த மர்ம பொருள் வெடித்துச் சிதறியதில் தீப்பிழம்புகள் ஏற்பட்டதாகவும், 4 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டு இருப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். வெடித்ததும், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து, அந்த கல்லுாரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த பொருட்களை சேகரித்து, தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். வேலுார் கலெக்டர் நந்தகோபால் கூறுகையில், ''தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில், வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் வெடிக்கவில்லை. மாறாக, கல்லுாரி வளாகத்தில் சேகரித்த குப்பைகளுக்கு தீ வைத்த போது, அதிலிருந்த ஏதோ ஒரு பொருள் தான் வெடித்திருக்கிறது,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.