WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 27, 2016

எம்.இ., நுழைவுத்தேர்வுமே 2ம் தேதி முதல் பதிவு.

எம்.இ., - எம்.டெக்., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான, தமிழக பொது நுழைவுத்தேர்வான, 'டான்செட்' தேர்வுக்கான, 'ஆன்லைன்' பதிவு, மே,
2ம் தேதி துவங்க உள்ளது. சென்னை அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரி களில், எம்.இ., - எம்.டெக்., - எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளில் சேர, டான்செட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வின், 'கட் - ஆப்' மதிப்பெண்ணின் படி தான், முதுநிலை படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். வரும் கல்வி ஆண்டுக்கான, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் படிப்புக்கான, டான்செட் நுழைவுத்தேர்வு, ஜூன், 1லும், எம்.சி.ஏ., மற்றும் எம்.பி.ஏ., படிப்புக்கு, ஜூன், 11லும் நடக்கிறது. 'இந்த தேர்வுக்கு, மே, 2 முதல் மே, 17 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்' என, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.