WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 13, 2016

அரசுக் கல்லூரிகளில் சிபாரிசு கடிதங்கள் குவிகிறது!

கடலுார் மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சீட் கேட்டு சிபாரிசு கடிதங்கள் குவிந்து வருவதால், கல்லுாரி நிர்வாகங்கள் நெருக்கடிக்கு ஆளாகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு கடந்த மாதம் 17ம் தேதி, வெளியானது. இதில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள், உயர்கல்வி படிக்க, விரும்பிய கல்லுாரிகளுக்கு விண்ணப்பித்தனர். மாவட்டத்தில் கடலுார், சி.முட்லுார், விருத்தாசலம் உள்ளிட்ட இடங்களில், மொத்தம் மூன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்போது நடந்து வருகிறது. இதற்கிடையே, கல்லுாரிகளில் விரும்பிய பாடப்பிரிவில் சேர சீட் வாங்கி தருவதாகக் கூறி, இடைத்தரகர்கள் மாணவ, மாணவியரை நேரடியாகவும், மறைமுகமாகவும் அணுகி பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, வேண்டியவர்களுக்கு சீட் கேட்டு சிபாரிசு கடிதங்கள் நாளுக்கு நாள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் சம்பந்தப்பட்ட கல்லுாரி நிர்வாகங்களுக்கு சிபாரிசு கடிதங்களை அளிக்கின்றனர். வருவாய், காவல், தீயணைப்பு உள்ளிட்ட அரசு துறையினரும் சிபாரிசு கடிதங்களை அளிக்கின்றனர். இதனால், கல்லுாரி நிர்வாகங்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதுகுறித்து கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், கல்லுாரிகளில் நடைபெறும் கலந்தாய்வை பயன்படுத்தி இடைத்தரகர்கள் சீட் வாங்கித் தருவதாக பணம் பறிக்கின்றனர். மேலும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட் கேட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் சிபாரிசு கடிதங்களை அளிப்பதால் நெருக்கடிக்கு ஆளாகிறோம். முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த பின்னர் சிபாரிசு கடிதங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கலந்தாய்வின்போது, கல்லுாரியில் எந்தெந்த துறைகளில் எவ்வளவு காலியிடம் உள்ளது; இனவாரியாக எத்தனை இடங்கள் ஒதுக்கப்படுகிறது என, அறிவிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால், சீட் வாங்கித் தருவதாக கூறி பணம் பறிக்க அணுகும் இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.