Monday, June 13, 2016
ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை: மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும் மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று உதவி தொடக்கக் கல்வி அலுவலகங் களில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப் படுகிறது. இந்த கூட்டத்தில் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர் களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றதும் உடனுக் குடன் 5 நாட்களுக்குள் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஒவ் வொரு ஆசிரியரின் பணிப் பதி வேட்டில் அவர்களின் ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, அரைச் சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு, வருடாந்திர ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு வரவு பதிவு ஆகிய விவரங்கள் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இப்பணிகளைச் செய்ய ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.