WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, June 14, 2016

கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்கும் புதிய 'ஆப்' அறிமுகம்.


மும்பையைச் சேர்ந்த, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனம், 'கிரெடிட், டெபிட் கார்டு' மோசடியை தடுக்க, 'மேக்சிமஸ் ரக் ஷா' என்ற மொபைல், 'ஆப்' -
செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, மேக்சிமஸ் இன்போவேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்கட் சங்கர் கூறியதாவது: வழக்கமாக, மாதத்தில், 30 - 60 நிமிடங்கள் தான், பணம் எடுக்க, பொருட்கள் வாங்க, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறோம். மீதி நேரங்களில் கார்டுகளை, 'சுவிட்ச் - ஆப்' செய்ய, புதிய 'ஆப்' உதவும். கார்டு தொலைந்தாலும், பண மோசடி செய்ய முடியாது. வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணுக்கு, ஒருமுறை அனுப்பப்படும், 'பாஸ்வேர்டு' மூலமாகவே, 'சுவிட்ச் - ஆன்' செய்து, ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.