51 அரசு கல்லுாரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருப்பதால், அடிப்படை பணிகள் பாதிக்கப்படுவதாக அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் 80 அரசு கலைக்கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் 51
கல்லுாரிகளில் முதல்வர் இல்லாததால், பொறுப்பு முதல்வர்கள் உள்ளனர். இவர்களால் கொள்கை முடிவுகளை எடுக்க முடிவதில்லை. காலியிடங்கள் அதிகரித்து வருவதால் நிர்வாக பணிகளில் மட்டுமின்றி மாணவர்களின் கல்வி நலன் சார்ந்த உதவிகள் பெறுவதிலும் தொய்வு நிலை நீடிக்கிறது. புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் வெளிநாட்டு பல்கலை, ஆசிரியர்களை அனுமதிக்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, காரைக்குடி அழகப்பா அரசு கலை கல்லுாரியில் அனைத்து கல்லுாரி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் லோகநாதன், பொது செயலாளர் சிவராமன் கூறியதாவது: முதல்வர் காலிப்பணியிடத்தால் கொள்கை முடிவுகள் எடுப்பதில் சிக்கல் நிலவுகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர், துப்புரவு பணியாளர், அலுவலக உதவியாளர் காலியிடங்கள் உள்ளன. 10 ஆண்டுக்கு முன்பு அடிப்படை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு நியமிக்கப்படவில்லை. மாணவர்களே வகுப்பறை, வளாகங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.1998-ல் பணி உயர்வு பெற்றோர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தற்போது 5 ஆயிரம் ஆசிரியர்கள் பணி மூப்பை எதிர்நோக்கியுள்ளனர். பணிமூப்பு பட்டியல் வெளியிடாததால், துறை தலைவர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்படுகிறது. 3200-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கல்லுாரிகளில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி வரன்முறை படுத்த வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.