WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 29, 2015

பொது தேர்வு தேதி வெளியாவதில் இழுபறி.

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பை, கல்வித் துறை இழுத்தடிப்பதால், மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை,
காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் ஏற்பட்ட, மழை வெள்ள பாதிப்பால், பொதுத் தேர்வை தள்ளிப் போடலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், கல்வி ஆண்டின் இறுதியில், சட்டசபை தேர்தல் வர உள்ளதால், தேர்வுகளை விரைவில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பள்ளிக்கல்வித்துறையும், தேர்வுத்துறையும் இணைந்து, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணையை தயாரித்தன. ஆனால், அந்த கோப்பு, அரசு அனுமதிக்காக பல நாட்களாக கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால், தேதி அறிவிப்பு தாமதம் ஆகியுள்ளது. இதனால்,

அதிருப்தி அடைந்துள்ளஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறியதாவது:

நடப்பு கல்வி ஆண்டில், மாணவர்கள் பல விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக, மழை வெள்ளத்தால், ஒரு மாதம் வகுப்பு நடத்தவில்லை.இந்நிலையில், பொதுத் தேர்வை எழுத வேண்டிய மாணவர்களுக்கு, தேதி தெரிந்தால், அதற்கேற்ப திட்டமிட்டு படிக்கலாம். வழக்கத்துக்கு மாறாக, இந்த ஆண்டு தேர்வு அட்டவணையை, இன்னும் வெளியிடாமல் இழுத்தடிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.