சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு,வசதிகளை செய்து தர வேண்டும் என, தொடக்கப்பள்ளி ஆசிரியர்
கூட்டணி மாநில
பொருளாளர் ஏ.ஜோசப் சேவியர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி மற்றும் ஓட்டு எண்ணும் மையங்களில் தேர்தல் பணிக்காக ஆசிரியர், அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவர். தேர்தல் பணியில் தமிழக அளவில் 3 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். குறிப்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணிகளுக்கு, தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களே பெரும்பாலும் நியமிக்கப்படுவர்.பெண் ஆசிரியர்கள் அவதிஇதில், 80 சதவீதத்தினர் பெண் ஆசிரியர்கள்.ஓட்டுப்பதிவன்றும், அதற்கு முதல் நாளும் ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல வேண்டும். அங்கு, அடிப்படை வசதி
முழுமையாக ஏற்படுத்துவதில்லை. பெண் ஆசிரியர்கள் தங்க உரிய பாதுகாப்பு இல்லை. மேலும், ஓட்டுப்பதிவிற்கு பின், ஓட்டுப்பெட்டிகளை ஓட்டு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்ல உரிய போலீஸ் பாதுகாப்பு இல்லை. ஓட்டுப்பெட்டியை விட்டு நகர முடியாத நிலை
ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. மேலும், ஆசிரியர்களை 100 கி.மீ.,க்கு அப்பால் உள்ள ஓட்டுச்சாவடிகளில் நியமிக்கின்றனர். இதனால், பெண் ஆசிரியர்கள் இரவில் அங்கு செல்ல பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது.
எனவே, தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு, ஓட்டுச்சாவடிகளில் தங்க வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். இதை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கலெக்டர்களிடம் மனு அளித்து வருகிறோம். அந்த வகையில், சிவகங்கை கலெக்டர் மலர்விழியிடம் மனு அளித்துள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.