பெங்களூரு பல்கலைக்கழக தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பீடு
செய்யும் பணிகளை புறக்கணிப்பது என, கர்நாடகா பல்கலைக்கழக ஆசிரியர் கழக கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கர்நாடகா பங்கலைக்கழக ஆசிரியர் கழக கூட்டமைப்பு- எப்.யூ.சி.டி.ஏ.கே., தலைவர் பிரகாஷ் கூறியதாவது: எங்கள் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. அரசுக்கும், உயர் கல்வி துறைக்கும் பல மனுக்கள் கொடுத்து உள்ளோம்; எவ்வித நடவடிக்கையும் இல்லை. விடைத்தாள் மதிப்பீடு பணியை புறக்கணிப்பதன் மூலம், மாணவர்களை வருத்துவதாக கருத வேண்டாம். தற்போதைய அட்டவணைப்படி, பாடங்களை முடித்து கொடுப்போம்.
ஏற்கனவே, மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், மதிப்பீடு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நேரத்தில் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தவில்லை எனில், எங்களை அரசு புறக்கணிக்கும் வாய்ப்புள்ளது. இதனால், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரு பல்கலைக்கழக மதிப்பீடு பதிவாளர் கே.என்.நிங்கே கவுடா கூறுகையில், தற்போதைய சூழலில் ஆசிரியர்கள், தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பது சரியல்ல. அரசுடன் போராட வேண்டுமே தவிர, மாணவர்களின் எதிர்காலத்துடன் அல்ல. மதிப்பீடு பணியை அவர்கள் புறக்கணித்தால், மாற்று ஏற்பாடுகளை பெங்களூரு பல்கலைக்கழகம் மேற்கொள்ளும், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.