WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 3, 2016

போலி சான்றிதழ் மூலம் வேலையில் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது - மேலும் போலி ஆசிரியர்களை பிடிக்க வேட்டை.

                            போலி சான்றிதழ் மூலம் வேலையில் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது - மேலும் போலி ஆசிரியர்களை பிடிக்க வேட்டை

போலி சான்றிதழ் மூலம் ஆசிரியர் வேலை பார்த்த பள்ளி ஆசிரியர் ஒருவரும் அவருக்கு உதவிய இன்னொரு ஆசிரியரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் சிக்கியது பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:–

தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதனுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த முனியப்பன் பிளஸ்–2 வரை படித்து விட்டு ஆசிரியர் பயிற்சி முடிக்காமல் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தை படித்த சூப்பிரண்டு லோகநாதன் இதுகுறித்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். 

தனிப்படை போலீசார் முதலில் முனியப்பனின் சொந்த ஊருக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர் வேலை பார்க்கும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த எர்ரம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் விசாரணை நடத்தினர்.

அங்கு அவரது பெயர் துரைராஜ் என்று இருந்தது. பிற்பட்ட வகுப்பை சேர்ந்த அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்றும் ஆசிரியர் பயிற்சி முடித்தவர் என்றும் தெரியவந்தது.

இதுபற்றி கல்வி அதிகாரி சிவஞானம் விசாரணை நடத்தியபோது முனியப்பன் கடந்த 2001–ம் ஆண்டில் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தது தெரியவந்தது. முதலில் அவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்துள்ளார்.

2004–ம் ஆண்டு வேலூர் மாவட்டம் எர்ரம்பட்டிக்கு மாறுதலாகி வந்தது தெரிய வந்தது. கல்வி அதிகாரி சிவஞானம் கொடுத்த புகாரின் பேரில் முனியப்பனை போலீசார் கைது செய்தனர்.

அவருக்கு போலி சான்றிதழ் கொடுத்தது கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேந்திரன் என்று தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர்.

ராஜேந்திரன் 2001–ம் ஆண்டு போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்ததும் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார்.

போலி சான்றிதழ் தயாரித்து வேலையில் சேர்ந்த அனுபவம் இருந்ததால் ஆயிரக் கணக்கானோருக்கு போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்துள்ளார்.

2001–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் வேலை கிடைத்தது.

இதனால் தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களை சேர்ந்தவர்களும் தர்மபுரி, கிருஷ்ணகிரியில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதன்மூலம் வேலை பெற்றதும் தெரிய வந்தது.

வழக்கமாக அரசு வேலையில் சேர்ந்தால் போலீசார் பணியில் சேருபவர் மீது வழக்கு ஏதாவது உள்ளதா? என்று விசாரித்து அறிக்கை கொடுப்பார்கள். ஆனால் ஆசிரியர் பணியில் சேருபவர்களுக்கு அந்த விசாரணை கிடையாது. இதனால் போலி சான்றிதழ் கொடுப்பவர்களை உடனடியாக கண்டுபிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

போலி சான்றிதழ் மூலம் வேலைக்கு சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்ற ஆசிரியரை இன்று கைது செய்யப்பட்டார். இவர் போச்சம்பள்ளி அருகே உள்ள பூச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர். வேலூர் மாவட்டம் கந்திலியில் அரசு பள்ளியில் பணியாற்றி வந்தார்.

3 போலி ஆசிரியர்கள் பிடிபட்டதை தொடர்ந்து 2001–ம் ஆண்டு முதல் 2004–ம் ஆண்டு வரை ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவரின் சான்றிதழையும் மீண்டும் ஒருமுறை சரி பார்க்குமாறு கல்வி துறைக்கு தர்மபுரி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.