WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 3, 2016

புதுச்சேரியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தக வாசிப்பு முகாம்.

  புதுச்சேரி ஜிப்மரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தக வாசிப்பு முகாமில் பங்கேற்றோர். | படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி ஜிப்மர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தக வாசிப்பு முகாம் நேற்று நடை பெற்றது.

புதுச்சேரி அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் ஆகியவை சார்பாக 3-வது புத்தக வாசிப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது. உறுவையாறு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சதீஷ் வரவேற்றார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரி யர் ஜே.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கிப் பேசினார். பாரதி புத்த காலயம் புதுச்சேரி பொறுப்பாளர் ராம்கோபால், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வத்சலா மற்றும் புதுச் சேரியை சேர்ந்த பல்வேறு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25-க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முகாமில் பங்கேற்றனர்.

மாறுபட்ட கல்வி நடைமுறை தொடர்பாகவும், குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஆசிரியர்கள் மூலம் ஏற்படுத்தும் வகையிலும் வாசிப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ‘தி இந்து’ வெளியீடான நம் கல்வி நம் உரிமை புத்தகம், ச.மாடசாமி எழுதிய ‘என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா’, ஆயிஷா நடராசன் எழுதிய புத்தகம் மற்றும் பல்வேறு உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதை நூல்களை ஆசிரியர்கள் வாசித்தனர்.

இது தொடர்பாக ஜே.கிருஷ்ண மூர்த்தி கூறும்போது, ‘‘ஆசிரியர் களுக்கான புத்தக வாசிப்பு முகாம் மூலம் பள்ளிகளில் உள்ள நூலகங் களுக்குச் சென்று நூல்களை படிக்க செய்யும் வகையில் மாணவர்களை தயார் படுத்துவது, வகுப்பு இல்லாத நேரங்களில் சிறுகதைகளை படிக்குமாறு ஊக்கப்படுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். மேலும், புத்தக சந்திப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்வது. உலக புகழ்பெற்ற சிறுகதைகள், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசிக்க செய்வது. இவற்றின் தொடர்ச்சியாக தெருமுனைகளில் நூல்கள் வாசிப்புக் கூட்டம், நூல்கள் அறிமுகப்பயணம், புதுச் சேரியில் புத்தக வாசிப்பு இயக்கம் போன்றவையும் விரைவில் செயல்படுத்த திட்டம் உள்ளது’’ என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.