திருவண்ணாமலை கௌரவ விரிவுரையாளர் தமிழக அரசுக்கு எழுதிய கோரிக்கை மனு விவரம் பின்வருமாறு
தமிழகத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களில் சுமாம் 20 சதவீதத்தினர்கள்(3500 கௌரவ விரிவுரையாளர்களில் சுமார்800 பேர் மட்டும்) பல்கலை மானிய குழு (UGC) நிர்ணயித்துள்ள நெட்,செட் மற்றும் பி.எச்.டி தகுதியைக் கொண்டுள்ளனர்.இதனால் கௌரவ விரிவுரையாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய இயலாது என அரசு காரணம் காட்டி வருகிறது.இதனால் UGC கேட்கும் தகுதியைக் கொண்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களும் பாதிக்கிறார்கள். இதில் ஒரு சிலர் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ள 1144 பேராசிரியர் பணியிடங்களில் UGC தகுதியைக் கொண்டுள்ள கௌரவ விரிவுரையாளர்களை முதலில் பணி நிரந்தரம் செய்தப் பிறகு மீதம் இருக்கும் காலிப்பணியிடத்தினையே TRB மூலம் போட்டித்தேர்வு வைத்து நிரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இதே போன்று ஒவ்வொரு வருடமும் UGC கேட்கும் தகுதியினை பெற்ற கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்து பிறகே மீதமுள்ள இடத்தினை நிரப்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் மீதமுள்ள கௌரவ விரிவுரையாளர்களில் 80 சதவீதத்தினர் இரண்டாண்டுகளில் UGC கேட்கும் தகுதியை அடைந்துவிடுவார்கள்,அதுவரை UGCயின் அடிப்படை ஊதியம் 25000 ரூபாயினை கேரளா மாநில அரசு வழங்குவது போல் வழங்க வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.இதை அரசு பின்பற்றினால் 3500 கௌரவ விரிவுரையாளர்களும் மூன்று ஆண்டுகளில் பணி நிர்ந்தரம் பெற வாய்ப்பு உண்டு.ஆனால் அரசு கடந்த இரண்டு முறை நிரப்பிய அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பணியிடங்களில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர்களில் பெரும்பாலனோர் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்த பேராசிரியர்களும் ,தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர்களும் என்பது குறிப்பிடத் தக்கது.இதனால் அதிகம் பாதிக்கப் பட்டது குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் மட்டுமே ! எனவே இனிவரும் காலங்களிலாவது பணி நியமனத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை தந்து கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதரத்தை காக்க அரசு முன் வர வேண்டும் எனவும் ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் செட் தகுதித் தேர்வினை அரசியல் தலையீடு இல்லாமல் நடத்தவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.