மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 37 காசுகளும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாயும் உயர்த்தியுள்ளது.
சாதாரண பெட்ரோலுக்கான அடிப்படை கலால் வரியானது ரூ.7.36ல் இருந்து, 7.73 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண டீசலுக்கான வரி ரூ.5.83ல் இருந்து ரூ.7.83 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. மூன்று வாரங்களுக்குள் 2 முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள கூடுதல் சிறப்பு கலால் வரியையும் சேர்த்து மொத்தமாக பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 19 ரூபாய் 73 காசுகளும், டீசல் விலையில் லிட்டருக்கு 13 ரூபாய் 83 காசுகளும் மத்திய அரசு வரியாக செல்கிறது.
அரசு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவுக்கு ஏற்ப விலைக் குறைப்பின் முழு பயனையும் வழங்காததால், இந்த வரி உயர்வு பொதுமக்கள் மீது சுமத்தப்பட மாட்டாது என தெரிகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.