காஸ் மானியத்தை வங்கிக்கணக்கில் செலுத்தும் முறை வெற்றி பெற்றதை தொடர்ந்து மண்ணெண்ணெய்க்கான மானியமும் வங்கிக்கணக்கில் செலுத்தும் முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மானியத்தை நேரடியாக செலுத்தும் முறை வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து, மண்ணெண்ணெய் வாங்குபவர்கள், இனிமேல் மண்ணெண்ணெயை சந்தை விலைக்கு தான் வாங்க முடியும். அதன் பின்னர், மானியத்தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். தற்போது ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் ரூ.12க்க விற்கப்படுகிறது. ஆனால் மார்க்கெட் விலை ரூ.43 ஆகும். மானியத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், 2014 - 15ல் மத்திய அரசு வழங்கும் மானியத்தில் ரூ.24,799 கோடி மிச்சமாகும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. மண்ணெண்ணெய்க்கான மானியத்தை வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை அமல்படுத்த பல மாநில அரசுகள் முன்வந்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளது.
இந்த திட்டம் முதன் முதலில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல்,
01.சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர், துர்க், பிலாஸ்பூரிலும்,
02.அரியானா மாநிலம் பானிபட், பஞ்சகுலாவிலும்,
03.இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லா, சலோன், உனாவிலம்,
04.ஜார்க்கண்ட் மாநிலம், சத்ரா, கிரிதிக், கிழக்கு சிங்பும், ஹசரிபக், ஜம்தாரா, குந்தி
05.மத்திய பிரதேச மாநிலம் ஹோசானாபாத், ஹர்தா, கந்த்வா, புர்ஹன்புர்
06. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மற்றும் லடூர்
07. பஞ்சாப் மாநிலம் டாரன் டாரன், பதன்கோட், மொகாலி
08. ராஜஸ்தான் மாநிலம் ஜங்ஹூனு ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், இந்த திட்டம் அமல்படுத்தப்படும் பகுதிகளில் மானியமில்லாத(மார்க்கெட் விலைக்கு) மண்ணெண்ணெய் வாங்க வேண்டும். மானியத்தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். பயனாளிகள் மானியத்தொகையை பெறுவதில் குழப்பம் ஏற்படாமல் இருக்க, முன்னதாகவே, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மானியத்தொகை செலுத்தப்படும் என கூறியுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.