நடப்பு ஆண்டுக்கான, சிவில் சர்வீசஸ் தேர்வு உத்தேச பட்டியலை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பணிகளுக்கு, யு.பி.எஸ்.சி.,சார்பில், தேர்வுகள் நடத்தப்படும். மேலும், இன்ஜினியரிங், மருத்துவம், வனத்துறை பணிகளுக்கும், தனி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டிலும், யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள் பட்டியல், ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்படும். நடப்பாண்டுக்கான உத்தேச பட்டியல், தற்போது வெளியாகி உள்ளது.
சிவில் சர்வீசஸ் முதல்நிலை தகுதித் தேர்வு, ஆக., 7ல் நடக்கும். அதற்காக விண்ணப்பிக்கும் தேதி, ஏப்., 23ல் துவங்கி, மே, 20ல் முடிகிறது. தகுதித் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு, முதன்மை தேர்வு, டிச., 3 முதல், ஐந்து நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.