WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 3, 2016

பேராசிரியர் நியமன விதிமீறல் யு.ஜி.சி., எச்சரிக்கையால் மாணவர்கள் அச்சம்.


'விதியை மீறிய பேராசிரியர் நியமனத்தை பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., அங்கீகரிக்காது' என, பல்கலைகள் எச்சரிக்கப்பட்டுள்ளன. இதனால்,
அங்கீகாரம் இல்லாத பாடப்பிரிவுகளின் சான்றிதழ் செல்லுபடியாகுமா என, மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். ஒவ்வொரு பல்கலையிலும், யு.ஜி.சி., மூலம், கல்வி நிறுவனத்துக்கும், பாடப்பிரிவுகள், உள் கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் நியமனங்களுக்கு ஒப்புதல் பெற வேண்டும். யு.ஜி.சி., விதிகளின் படி, பேராசிரியர்களை நியமிக்க போட்டி தேர்வு வைக்க வேண்டும். அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும்.இதன்பின், ஆசிரியர்களின் விவரங்களை யு.ஜி.சி.,க்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். அதன் பிறகே குறிப்பிட்ட பாடப்பிரிவுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட பல்கலைகளுக்குட்பட்ட கல்லுாரிகளில் ஆசிரியர் நியமனத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. திருவள்ளுவர் பல்கலையில், பேராசிரியர் நியமனத்தில் நடந்த விதிமீறல் புகார் குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு பதில் மனு தாக்கல் செய்த யு.ஜி.சி., 'திருவள்ளுவர் பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லுாரிகளில், மொத்தமுள்ள, 4,240 ஆசிரியர்களில், 1,970 பேருக்கு மட்டுமே, யு.ஜி.சி.,யின் அனுமதி பெறப்பட்டுள்ளது. 'மற்றவர்களை விதிகளின் படி நியமிக்காத நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுத்து, பல்கலையில் இருந்து அறிக்கை தர வேண்டும்' என, தெரிவித்தது. நீதிமன்றமும் இதே உத்தரவை பிறப்பித்தது. ஆனால், இதுவரை திருவள்ளுவர் பல்கலை உள்ளிட்ட பல்கலைகள் பேராசிரியர் பட்டியலை, யு.ஜி.சி.,யிடம் அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. எனவே, மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடப்பிரிவுக்கு யு.ஜி.சி., அனுமதி உள்ளதா என அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து, யு.ஜி.சி., தலைவர் தேவராஜ் கூறும் போது, ''பேராசிரியர் நியமனம் தொடர்பாக, யு.ஜி.சி.,யிடம் பல்கலைகள் அனுமதி வாங்குவது கட்டாயம். அதில் சலுகைக்கு இடமில்லை. ''எந்தெந்த கல்லுாரிகளில் விதிகளை மீறி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர் என்ற விவரங்களை, யு.ஜி.சி., சேகரித்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.