முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அரசு தொடக்க,
நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு தகுந்தாற்போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்கள், இளநிலை (பி.ஏ.,- பி.எஸ்சி.,) பட்டத்துடன் பி.எட்., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும். முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்.சி.,) முடித்தால் 2 வது ஊக்க உயர்வு வழங்கப்படும்.
அதேபோல் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்சி.,) முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும், எம்.எட்., முடித்தால் 2 வது ஊக்க உயர்வும் வழங்கப்படும். உயர்க்கல்வி பயில ஆசிரியர்கள் கல்வித்துறையில் முன் அனுமதி பெறவேண்டும். ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமலேயே உயர்கல்வி முடித்து ஊக்க ஊதிய உயர்வு கேட்டு விண்ணப்பித்தனர்.
முன்அனுமதி இல்லாத தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மறுத்தனர். ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முன்அனுமதி பெறாமல் உயர்க்கல்வி முடித்த ஆசிரியர்களின் பட்டியலை தொடக்கக் கல்வித்துறை கோரியுள்ளது.
இந்த பட்டியலை பெயர் விடுதலின்றி ஜன., 12 க்குள் அனுப்பி வைக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.