WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 5, 2016

10ம் வகுப்பு தேர்வு'ஹால் டிக்கெட்' தயார்.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள், பிப்., 8 முதல், 'ஹால் டிக்கெட்' பெற்றுக் கொள்ளலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச் மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், பிப்., 8 முதல், ஹால் டிக்கெட்டைwww.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பெற முடியும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.