WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 4, 2016

'வாட்ஸ் ஆப்' குரூப்பில் இனி 256 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம்




                                  

உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோர் தங்கள் நண்பர்களுடன் தொடர்ந்து ஆன்லைனில் இணைந்திருக்க 'வாட்ஸ் ஆப்' குரூப் வசதியை பயன்படுத்துகின்றனர். ஒரு 'வாட்ஸ் ஆப்' குரூப்பில் அதிகபட்சமாக 50 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்து வந்தது. பிறகு, 2014 நவம்பரில் இந்த எண்ணிக்கை 100-ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கையை 256-ஆக அதிகரித்துள்ளது 'வாட்ஸ் ஆப்'. ஆனால், இந்த புதிய வசதி ஆன்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே வெளிவந்துள்ளது. மற்ற இயங்குதளங்களிலும் விரைவில் வருகிறது. 


கடந்த 2014-ம் ஆண்டு 'வாட்ஸ் ஆப்'-ஐ பேஸ்புக் நிறுவனம் 22 பில்லியன் டாலருக்கு வாங்கியது. அதன்பிறகு, அமோக வளர்ச்சியை கண்டு வரும் 'வாட்ஸ் ஆப்' தற்போது உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில், ஆண்டு சந்தாவாக வசூலிக்கப்பட்டு வந்த ஒரு டாலர் கட்டணத்தையும் 'வாட்ஸ் ஆப்' ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.