WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 12, 2016

2016-17 ஆம் கல்வி ஆண்டுக்கான தனியார் பள்ளிகளின் கட்டணம் விவரம்: தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டண விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் (www.tn.gov.inmiscellaneousFee20152018.html) வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அதிக அளவு கட்டணங்கள் வசூலிப்பதை முறைப்படுத்தவும், தகுந்த கட்டணங்களை நிர்ணயிக்கவும் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில், தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவானது, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்துள்ள கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டண விவரங்கள் மாவட்ட வாரியாக தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வரும் கல்வியாண்டுக்கான (2016-17) மாணவர் சேர்க்கை பல தனியார் பள்ளிகளில் தொடங்கியுள்ள சூழலில், கட்டண நிர்ணய விவரங்கள் தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.