2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்விப் பட்டயத் தேர்வு எழுதிய பயிற்சி மாணவர்கள், தனித் தேர்வர்கள் விடைத்தாளின் மறுகூட்டல், நகல் கோரி செவ்வாய்கிழமை (பிப்ரவரி 16) முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம்
என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
விடைத்தாளின் நகல் பெறப்பட்ட பின்னர், அதைத் தொடர்ந்து, விருப்பமுள்ள தேர்வர்கள், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யவும் www.tndge.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், குறிப்பிட்டுள்ள கட்டணத் தொகையும் மேற்குறிப்பிட்ட நாள்களில் தாங்கள் பயின்ற மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் நேரடியாகச் செலுத்தி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.