WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 10, 2016

ஜெ., பிறந்தநாள்: அரசு பள்ளிகளில் 24 மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு.


முதல்வர் ஜெ., பிறந்தநாளை முன்னிட்டு,அரசு பள்ளிகளில் 24 சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிப்.,24ம் தேதி தமிழக முதல்வர் ஜெ., பிறந்த நாளையொட்டி, அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர்,
எலும்புமுறிவு, கண், காது, மூக்கு, தொண்டை, பல் உட்படஎல்லா நோய்களுக்கும் தனித்தனியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இதற்காக 15 டாக்டர்கள் கொண்ட குழு, செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த குழுவினர் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இந்த முகாம் வரும் பிப்.14ல் துவங்கி பிப்.29ம் தேதிவரை நடத்த வேண்டும். இந்நாட்களில் 24 முகாம்களுக்கு குறையாமல் நடத்த வேண்டும் என, பொது சுகாதாரத் துறையினர் அனைத்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.மருத்துவ இணை இயக்குனர் ரவிக்கலா கூறியதாவது:முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு முதலில் சிகிச்சை துவக்குகிறோம். இதில் பொதுமக்களும் கலந்து கொண்டு சிகிச்சை பெற கிராமங்களில் தண்டோரா போட்டு அறிவிக்கப்படும். முகாம்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள் அளிக்கப்படும். இதில் கர்ப்பிணிகள், குழந்தைகள், கர்ப்பப்பை நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.