WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 10, 2016

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குதேர்வுக்கு முன்பு ஜாதி, இருப்பிட சான்று.


ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஜாதி, இருப்பிடச் சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு தேர்வு துவங்க உள்ளநிலையில், இதுவரை சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 8 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்ததும், உயர்கல்விக்காக வேறு பள்ளியில் சேர வேண்டியநிலை உள்ளது. இதனால் அவர்கள் சான்றிதழ்கள் வாங்க தாலுகா அலுவலகங்களுக்கு அலைந்து வருவதாக புகார் எழுந்தது
.இதையடுத்து 8 ம் வகுப்பு மாணவர்களுக்காவது தேர்வுக்கு முன்பு சான்றிதழ் வழங்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுதலின்றி அனைத்து மாணவர்களிடமும் விண்ணப்பங்களை பெற்று வருவாய்த்துறையிடம் மொத்தமாக ஒப்படைக்க வேண்டும். பின் ஜாதி, இருப்பிடச் சான்றுகளை பெற்று மாணவர்களிடம் வினியோகிக்க வேண்டும். இதற்காக மாணவர்களை தாலுகா அலுவலகங்களுக்கு அலையவிட கூடாது எனவும், தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.