WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 10, 2016

டி.இ.ஓ., காலிப்பணியிடம் கல்வித்துறை நடவடிக்கை.


தமிழக பள்ளி கல்வித்துறையிலுள்ள மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) காலியிடங்களை நிரப்ப, 2008க்குள் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டுள்ளது.அரசு உயர் நிலை, தொடக்கக்கல்வித்துறையில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்
பணியிடங்கள்காலியாக இருந்தன. சீனியர் தலைமை ஆசிரியர்களே கூடுதலாக கல்வித்துறை அலுவலர் பணியை கவனித்தனர். பொறுப்பு அலுவலர் என்பதால், துறை சார்ந்த சில முடிவு, உத்தரவுகளை எடுக்காமல் இருந்தனர்.பணியில் தொய்வு நிலை அறிந்து, டி.இ.ஓ., காலியிடங்களை நிரப்ப கல்வித்துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. முதல் கட்டமாக 30 டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. எஞ்சிய காலியிடங்களை வரும் கல்வியாண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னுரிமை கருத்துரு கேட்டு கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2008 டிச.,31க்குள் அரசு உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் முன்னுரிமைபடி, சி.இ.ஓ., அலுவலக ஊழியர்கள் பட்டியலை சேகரித்து அனுப்புகின்றனர். அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஏற்கனவே நிரப்பிய காலி யிடம் தவிர, 25க்கும் மேலான டி.இ.ஓ., காலியிடம் விரைவில் நிரப்பப்படும். 40 சதவீதம் உயர் நிலைக்கும், 35 சதவீதம் மேல் நிலைக்கும் இடம் அளிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சீனியர் தலைமை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு உள்ளது,” என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.