WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, March 7, 2016

பிஎச்.டி., ஆய்வு காலத்தை அனுபவத்தில் சேர்க்க அனுமதி.


'பிஎச்.டி., பட்டத்துக்காக, ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் காலத்தை, ஆசிரியர் அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாம்' என, பல்கலை மானியக் குழுவான,
யு.ஜி.சி., அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், ஏராளமான பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்பும் வகையில், பல்கலைகளுக்கு புதிய சலுகையை, யு.ஜி.சி., வழங்கியுள்ளது. அதன்படி, 'பல்கலை மற்றும் கல்லுாரிகளில் முதுகலை, ஆராய்ச்சிப் படிப்பு முடித்தவர்களை பணி நியமனம் செய்யும் போது, அவர்களின் அனுபவ காலத்தில், பிஎச்.டி., படிக்கும் காலத்தையும் சேர்க்கலாம்' என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. 'பிஎச்.டி., காலத்தில் விடுப்பு இன்றி ஆய்வுப் பணியில் ஈடுபடும் காலத்தை இதில் கணக்கிடலாம்' எனவும், அதில் கூறப்பட்டுள்ளது. இது, முழு நேர பிஎச்.டி., ஆய்வாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்; பகுதி நேர ஆய்வாளர்களுக்கு பொருந்தாது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.