பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னுடைய பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அண்மையில் பாதுகாப்பு அம்சமான ஒருவருடைய தகவலை வேறு யாரும் ஹேக் செய்து பார்க்க முடியாத வகையில்
end-to-end encryption ஆப்சனை கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு வசதிகளை வழங்கவுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்.இல். (IOS) கால் பேக் (call back) ஆப்சன் கொண்டுவரவுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் செல்லாமலே மொபைல் போனில் இருந்து கால் செய்யலாம். அதேபோல் வாய்ஸ் மெய்ல் (voicemail), ஜிப் பைல் சேரிங் ஆப்சனை கொண்டுரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அனுப்பிய மற்றும் பெறப்பட்ட பி.டி.எப். பைல்களான Docs, Sheets மற்றும் Slides files உள்ளிட்டவற்றை ஜிப் பைலாக மாற்றி அனுப்பும் வசதியையும் கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.