WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 28, 2016

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 9-ந்தேதி வெளியாக வாய்ப்பு.

பிளஸ்–2 தேர்வு மார்ச் 4–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 1–ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சுமார் 8 லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14–ந்தேதி தொடங்கி ஏப்ரல்
23–ந்தேதி வரை நடந்தது. இதையடுத்து மதிப்பெண்கள் பதிவு செய் யும் பணி நடந்த வருகிறது. சென்னை கோட்டூர்புரத் தில் உள்ள டேட்டா சென் டரில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கிறது. மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட் டது. இரவு – பகலாக நடைப் பெற்று வரும் இந்த வேலை ஒரு சில நாட்களில் நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 7–ந்தேதி பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதால் வினாத்தாள் திருத்தும் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குறைவாக இருந்ததால் தாமதமாக நிறைவுப் பெற்றது. அதனால் தேர்வு முடிவு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தேர்தலுக்கும் பிளஸ்–2 தேர்வு முடிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. திட்டமிட்டப்படி தேர்வு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. மே முதல் வாரத்தில் முடிவை வெளியிடலாம் என தேர்வுத் துறை உத்தேசித் துள்ளது. 7 அல்லது 9–ந்தேதி முடிவு வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. பிளஸ்–2 தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா தேர்வு முடிவு வெளியாகும் தேதியை முடிவு செய்து அறி விக்க இருக்கிறார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.