WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, April 22, 2016

பகுதி நேர பி.இ., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லுாரிகளில், 2016 - 17ம் கல்வியாண்டில், பகுதி நேர, பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கு,
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி விடுத்துள்ள அறிக்கை: கோவை, சேலம், திருநெல்வேலி, வேலுார், பர்கூர், அரசு பொறியியல் கல்லுாரி; காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லுாரி; கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ஆகியவற்றில், பகுதி நேர பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அன்று, பட்டயப் படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம் விண்ணப்பதாரர் பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவும் வேண்டும் www. ptbe-tnea.com என்ற இணையதளம் வாயிலாக, விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின், அதை பிரதி எடுத்து, உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு, www.ptbe-tnea.com இணையதள முகவரியில், Information and Instructions to Candidates என்ற பக்கத்தில் பார்க்கவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.