WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, May 1, 2016

வேளாண் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 2016 - 17ம் கல்வியாண்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் மே 12ம் தேதி துவங்குகிறது. பல்கலை துணைவேந்தர் ராமசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலையால் நடத்தப்படும், 13
இளமறிவியல் படிப்புக்கு மே, 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும். மொத்தம், 2,600 இடங்களுக்கு அரசு விதித்த விகிதாச்சாரப்படி, 65 சதவீதம் அரசுக்கும், 35 சதவீதம் தனியார் கல்லுாரிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மே, 12ம் தேதி முதல் ஜூன், 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தரவரிசை பட்டியல், ஜூன், 20ல் வெளியிடப்படும். சிறப்பு, ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு ஜூன், 27, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதற்கட்ட கலந்தாய்வு, ஜூலை, 4 முதல், 10ம் தேதி வரையும், தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை, 13ம் தேதியும், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15, 16ம் தேதிகளும் நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 25 முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. தேவைப்பட்டால் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். சேர்க்கை தேதிகளில் எவ்வித மாற்றமும் இருக்காது. அரசு மட்டுமின்றி, தனியார் இடஒதுக்கீடுக்கும் விண்ணப்பம் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில், திருநங்கைகளுக்கும் தனி இடஒதுக்கீடு உள்ளது. இதர பிரிவினர், 600 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர், 300 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இவ்வாறு, துணைவேந்தர் ராமசாமி கூறினார். மாணவர்கள், www.tnau.ac.in/admission.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 0422 6611345/46 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.