WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, June 22, 2016

10 ஆண்டு பழமையான பிளஸ் 2 'சிலபஸ்' : புதிய பாடத்திட்டம் எப்போது வரும்?

பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகள் பழமையாகி விட்ட நிலையில், புதிய பாடத்திட்டம் தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், ஒவ்வொரு பாடத் திட்டமும், ஐந்து ஆண்டுகளுக்கு
ஒரு முறை புதுப்பிக்கப்படும். தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கல்வியின் தேவை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். இப்படி உருவாக்கப்படும் பாடத்திட்டங்கள், அடுத்த ஐந்தாண்டுகள் வரை அமலில் இருக்கும். ஆனால், கடந்த, 20 ஆண்டுகளாக, இதுபோன்ற தொலைநோக்கு பார்வை, பள்ளிக்கல்வித் துறையில் குறைந்து விட்டது. மாறாக, கடந்த, 10 ஆண்டுகளாக, பள்ளிக் கல்வியில் என்ன இலவசத்தை புகுத்தலாம் என, அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசுக்கு ஆலோசனை கொடுப்பதால், மாணவர்களுக்கான பாடத்திட்டம் பற்றி, அதிகாரிகளால் முழு கவனம் செலுத்த முடியவில்லை. தற்போதைய பாடத்திட்டம், 2007ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. அதுவும், 2005ம் ஆண்டிலேயே தயார் செய்யப்பட்டதால், அதன் ஆயுட்காலம், 10 ஆண்டுகளை தாண்டி விட்டது. இந்நிலையில், பாடத்திட்டத்தை மாற்ற, 2012ல், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஐ.ஐ.டி., பேராசிரியர் நாகபூஷனராவ் தலைமையில் கமிட்டி அமைத்து, புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த பாடத்திட்டத்தின் மீது, பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, இறுதி வடிவம் அளிக்கப்பட்டது. பின், 2013ம் ஆண்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், மூன்றாண்டுகளை தாண்டும் நிலையில், புதிய பாடத்திட்டத்துக்கு அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகளை தாண்டி விட்டதால், அதை கிடப்பில் போட பள்ளிக்கல்வி செயலக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விரைவில், முதல்வர் ஜெயலலிதாவுடன் ஆலோசித்து, மீண்டும் புதிய பாடத்திட்டம் தயாரிக்க, கமிட்டி அமைக்கப்படலாம் என தெரிகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.