சின்னய்யன். இவர் 30 ஆண்டு களாக தினக்கூலி அடிப்படையில் வனத்துறையில் பணியாற்றியுள்ளார். இதையடுத்து, 2003 அக்டோபர் 20ல் இவர் நிரந்தர பணியாளரானார். இந்நிலையில், கடந்த 2010 ஜூன் 30ல் சின்னய்யன் ஓய்வு பெற்றார். ஆனால், அவருக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை. சின்னையன் 10 ஆண்டுகள் மட்டுமே நிரந்தரப் பணியாளராக பணியாற்றியுள்ளார் என்றும் அதற்கு முன் அவர் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றியுள்ளார் என்றும் அதனால் அவர் ஓய்வூதியம் பெற தகுதியில்லாதவர் என்று மாவட்ட வனத்துறை அதிகாரி கூறியிருந்தார்.
இதையடுத்து, தனக்கு ஓய்வூதியம் வழங்கக்கோரி சின்னையன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரிபரந்தாமன் அளித்த உத்தரவு வருமாறு: தினக்கூலி அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவரை காலம கடந்து நிரந்தரம் செய்தது அவரது தவறு அல்ல. அதனால், அவர் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் கொண்டே ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
எனவே, மனுதாரர் நிரந்தரம் செய்யப்படுவதற்கு முன்பு அவர் பணியாற்றிய காலத்தில் 50 சதவீதத்தை கணக்கில் கொண்டு அவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மனுதாரரைப் போல் பிரச்னையில் உள்ள மற்ற துறையில் உள்ள பணியாளர்களும் ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்கள்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.