WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 17, 2016

2018ம் ஆண்டு 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் வந்தது எப்படி.


இன்னும், இரண்டு ஆண்டுகள் கழித்து புழக்கத்துக்கு வரவேண்டிய, 500 ரூபாய் நோட்டுகள், இப்போதே கிடைப்பதால், பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. ஆண்டுதோறும், ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடும் ரூபாய்
நோட்டுகளில், அவை வெளியிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படும். ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது தொடர்பாக, அவற்றின் விவரங்களை குறிப்பிட்டு, ரிவர்வ் வங்கியும் அறிக்கை வெளியிடும். அடுத்த ஆண்டு புழக்கத்தில் விடுவதற்காக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள், அதற்கு முந்தைய ஆண்டுகளில் புழக்கத்திற்கு விடப்படாது. இந்நிலையில், '2018'ம் ஆண்டு என அச்சிடப்பட்ட, 500 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் சென்னை கிளையை அணுகியபோது, 'இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள, 500 ரூபாய் நோட்டுகள் சிலவற்றில், '2018' என குறிப்பிடப் பட்டுள்ளது. தற்போது, 2016ம் ஆண்டு நடந்து வரும் நிலையில், 2018ம் ஆண்டுக்கான நோட்டுகள் எப்படி புழக்கத்தில் வந்தன என்பது குறித்து, மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவை, கள்ள நோட்டுகளா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.