WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, June 24, 2016

தொடக்க கல்வி டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி ஜூலை 4 முதல் கவுன்சிலிங் துவக்கம்.


தொடக்க கல்வி டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை நடக்கும்' என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, அதன்
இயக்குனர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொடக்க கல்வி டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தரவரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் நடக்கும் இடம், ஜூன் 27ம் தேதி, www.tnscert.org இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், கவுன்சிலிங்குக்கான அழைப்புக் கடிதமும், அதே இணையதளத்தில், sws 2016 - 17 என்ற இணைப்பில், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்யலாம். அனைவருக்கும், ஜூலை 4ம் தேதி முதல், 9ம் தேதி வரை, அனைத்து மாவட்டங்களிலும், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாவட்ட மையங்களான, 'டயட்' அலுவலகங்களில் நடக்கும். ஆங்கிலம், தெலுங்கு, உருது, சிறப்பு பிரிவினருக்கு, ஜூலை 4; தொழிற்பிரிவு, கலைப்பிரிவு, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு மட்டும், ஜூலை 5; தொழிற்பிரிவு மாணவியருக்கு, ஜூலை 7; கலைப்பிரிவு மாணவியருக்கு, ஜூலை 8; அறிவியல் பிரிவு மாணவியருக்கு, ஜூலை 9ம் தேதியில் கவுன்சிலிங் நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.