பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அண்ணா பல்கலை., வளாகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது இன்ஜினியரிங் தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டார். பின்னர் அவர் கூறுகையில், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு 1,34,946 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் 7 பேர்200 க்கு200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இவர்களில் அபூர்வா தர்ஷினி என்ற மாணவி முதலிடத்தில் உள்ளார். இன்ஜி., படிப்புக்களுக்கான கவுன்சிலிங் ஜூன் 24ம் தேதி துவங்க உள்ளது. இதில் ஜூன் 24ம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும், ஜூன்25ம் தேதி மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், ஜூன்27 ம் தேதி பொது பிரிவு மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.