WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 19, 2016

வினாத்தாள் மாற்றம்: பி.எட்., மாணவர்கள் அதிர்ச்சி.

பி.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு உளவியல் தேர்வில், வினாத்தாள் முறை மாற்றப்பட்டு இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பி.எட்., பட்டப் படிப்பு, இந்த ஆண்டு முதல், ஓராண்டில் இருந்து இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டு உள்ளது. மத்திய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி, புதிய பாடத்திட்டமும் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு, புதிய பாடத்திட்டத்தின் கீழ், 60 ஆயிரம் பேர், 650 கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இவர்களுக்கான முதலாம் ஆண்டு பருவத்தேர்வு நேற்று துவங்கியது. முதல் நாளில், அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக உளவியல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி, 70 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும். அதில், இரண்டு மதிப்பெண்களுக்கு, 10 கேள்விகள்; ஐந்து மதிப்பெண்களுக்கு, ஆறு கேள்விகளில், நான்கு கேள்விகள்; 10 மதிப்பெண்களுக்கு, ஆறு கேள்விகளில், மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஆனால், நேற்று வழங்கப்பட்ட வினாத்தாளில் இந்த முறை மாற்றப்பட்டு இருந்தது. இரண்டு மதிப்பெண்களுக்கு, ஐந்து கேள்விகள்; ஐந்து மதிப்பெண்களுக்கு, எட்டு கேள்விகள் வழங்கப்பட்டு, அவற்றில் ஆறு கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டியிருந்தது. மூன்றாவது பிரிவில், முன்னர் இருந்த, 10 மதிப்பெண்களுக்கு பதில், தற்போது, 15 மதிப்பெண்களுக்கு ஒரு கேள்வி என, 'சாய்ஸ்' அடிப்படையில் நான்கு கேள்விகள் இடம் பெற்று இருந்தன. இந்த வினாத்தாளை பார்த்ததும், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே, திட்டமிட்டு படித்த முறைக்கு மாறாக வினாத்தாள் இடம் பெற்றதால், பல மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவரா என்ற அச்சம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.