பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu தங்கள் விண்ணப்ப எண்ணைக்
குறிப்பிட்டு தங்களின் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம்.
விளையாட்டுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வை தொடர்ந்து பொது கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 21-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது, எந்த நேரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்? என்ற பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதன்மூலம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு நாள், நேரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம்.
கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் யாருக்கும் தபால் மூலம் அனுப்பப்படாது. மாணவர்கள் அழைப்புக்கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.