பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த உயர் கல்வி பயிலும் மாணவர்கள், சிறந்த ஆசிரியர்களின் பாடங்களைத் தாமே படித்துக் கொள்ளும் விதமாக "ஸ்வயம்' என்ற புதிய இணையதள வசதி தொடங்கப்பட இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் அனில் டி.சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
கோவையில் ஐசிடி அகாதெமி சார்பில் புதன்கிழமை
நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதாவது:
நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் கற்பித்தல், ஆராய்ச்சி போன்றவற்றில் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதன் ஒரு பகுதியாக தலைசிறந்த கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை, நாட்டின் வேறு ஒரு மூலையில் வளர்ச்சி அடையாத பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் படித்து அறிந்து கொள்ளும் விதமாக இணையதள வசதி நிறுவப்பட உள்ளது.
அமெரிக்காவை முன் மாதிரியாகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இணையதளத்தை பொறியியல், இதர உயர் கல்வி பயிலும் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் வகையில், அனைத்து பாடங்களும் இடம் பெறும் விதமாக வடிவமைத்துள்ளோம். இது விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள், மாற்றங்களுக்கு ஏற்ப தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாகவும், ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் புதிய பாடப் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் தங்களின் பாடத் திட்டங்களை ஆண்டுக்கு ஒரு முறையோ, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், உயர் கல்வி பயிலும் மாணவர்கள் விருப்பப் பாடங்களை தாங்கள் விரும்பியவாறு தேர்வு செய்து கொள்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். கட்டுமானப் பொறியியல் படிக்கும் மாணவரை, அதற்கு தொடர்பில்லாத மின்னணு பொறியியல் தொடர்பான பாடத்தை துணைப் பாடமாக படிக்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றார்.
நிகழ்ச்சியில், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன முதன்மைச் செயலர் கே.ராஜாராமன், ஐ.சி.டி. அகாதெமி தலைவர் எம்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.