அரசு பள்ளிகளில் ஓவியம், தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, கணினி அறிவியல் போன்ற பாடங்களுக்கு, சிறப்பு ஆசிரியர்களாக, 16,549 பேர் கடந்த,
2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். முதலில், 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில், இவர்கள் நியமிக்கப்பட்டனர். பின், 2014ம் ஆண்டு, இவர்களின் தொகுப்பூதியம் மாதம், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, 1.65 லட்சம் மனுக்களை அரசுக்கு அனுப்பும் நுாதன போராட்டத்தை, நேற்று துவங்கினர். முதல் நாளில், முதல் மனுவை,
கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர் ராஜ்குமார், செயலர் சாந்தகுமார் ஆகியோர், முதல்வரின் தனிப்பிரிவிலும், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவிடமும், பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமினிடமும் வழங்கினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.